23 ஆண்டு கால ஆசிரியர் பணி: வகுப்பறையில் மாணவர்கள் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தி உள்ளது.

9th standard class teacher chest pain death in classroom in trichy

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஶ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 23 வருடங்களாக கணித ஆசிரியராக பாண்டுரங்கன் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஆசிரியர் பாண்டுரங்கன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

உடனடியாக மாணவர்கள் அருகில் இருந்த சக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த ஆசிரியர்கள் மயங்கி விழுந்த ஆசிரியர் பாண்டுரங்கனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றும், மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

பரமக்குடியில் பயங்கரம்; நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நபர் கொடூரமாக அடித்துக் கொலை

இதனைத் தொடர்ந்து ஆசிரியர் பாண்டுரங்கன் உயிரிழந்த தகவலை அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு சக ஆசிரியர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவரது சொந்த ஊரான கடலூர்  மாவட்டத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் பொழுது மாரடைப்பு ஏற்பட்டு கணித ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை பயம் காட்ட விளையாட்டாக நீரில் குதித்த நபர்; மனைவியின் கண் முன்னே உயிர் பிரிந்த சோகம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios