கோவையில் நோக்குவர்மம் மூலம் பெண்ணை ஏமாற்றி நகை, பணம் பறிப்பு; மாந்திரிக திருடனால் குடும்ப பெண்கள் பீதி

கோவையில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மயக்கி நகை, பணத்தை கொள்ளையடித்த மாந்திரிக திருடனை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Jewelery and money stolen from a woman who was alone at home after practicing witchcraft in Coimbatore vel

கோவை விலாங்குறிச்சி, சேரன்மாநகர் விரிவாக்க பகுதியை சேர்ந்த தம்பதிகள் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், தங்களது வீட்டில் வேலையை முடித்து விட்டு, பூஜை அறையில் சாமி கும்பிட தயார் ஆன போது, வீட்டின் வாசல் மணி அடிக்க, வீட்டின் உள்ளே இருந்தபடியே எட்டி பார்த்த பெண்மணியை கேட்டின் வாசலில் காவி உடையில் மந்திர வாதி போல நின்ற இளைஞன், தன் கையில் ஏதோ வைத்து பெண்மணியை நோக்கி உன் வீட்டின் உள்ளே கெட்ட ஆவிகள் உலா வருது. அதை விரட்டலனா, உன் புருஷன் செத்து போவாரு என கத்தி சொன்னான், பயந்து போன பெண்மணி வெளியே வரவில்லை. 

ஆனால் அந்த மந்திர திருடன் மீணடும், மீண்டும்  வீட்டின் முன்பு நின்று கொண்டு  அழைத்துள்ளான். இவரும் என்ன என்று வீட்டின் உள்ளே இருந்தபடி கேட்டுள்ளார். ஆனால் வெளியே இருந்த நபர் அப்பெண்ணை வெளியே வருமாறு அழைத்துள்ளான். அந்த பெண்ணும் என்ன என்று கேட்டபடி வெளியே வந்துள்ளார். அவரிடம் பேச்சு கொடுத்தபடியே, மந்திர திருடன், என் முகத்தைப் பார் என்று ஹிப்னாடிசம் செய்துள்ளான். இதனால் தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே அடையாளம்  தெரியாத  நபர் கூறியபடி தனது கையில் மாட்டி இருந்த 2 தங்க மோதிரங்களை கழட்டி கொடுத்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சுயநினைவு இல்லாமல் மோதிரத்தை கழட்டி கொடுத்தவுடன், வாங்கிய நபர் தப்பிச் சென்றாக கூறப்படுகிறது. இதில்  நீண்ட நேரம் கழித்து சுயநினைவு திரும்பியதும்,  தனது கையில் இருந்த மோதிரம் காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தவர். பின் தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கணவரிடம்  நடந்த விபரங்களை கூறியுள்ளார். அதில் உன் வீட்டில் செத்து போன உன் மகனுடன் கெட்ட ஆவிகள் வீட்டிற்குள்ளே இருக்கு, அதை விரட்டலைனா, உன் புருஷன் செத்து போவாரு என சொன்னான் என்று அழுத பெண், மேலும் நடந்த விஷயத்தை கணவரிடம்  சொல்லுகையில்  வீட்டின் முன்பு வந்து தன்னை அழைத்ததாகவும், அவன் முன் வந்து நின்றவுடன் தான்  தனக்கு சிறிது நேரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் சுயநினைவு இல்லாமல் மோதிரத்தை கழட்டி கொடுத்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

கனமழை எதிரொலி; கோத்தகிரி அருகே கடும் நிலச்சரிவு - 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் ஹிப்னாடிசம் செய்து தங்க மோதிரங்களை பறித்து சென்ற புது வகையான மந்திர திருடனை  கண்காணிப்பு காமிரா காட்சிகளை  ஆதாரங்களாக வைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios