மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்… ஆளுநர் குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து!!

மனிதாபிமானத்தோடு ஆளுநர் செயல்பட வேண்டும் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார்.

governor should act keeping in mind the welfare of the people says sathyaraj

மனிதாபிமானத்தோடு ஆளுநர் செயல்பட வேண்டும் என நடிகர் சத்தியராஜ் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை வஉசி மைதானத்தில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை வரலாற்று புகைப்பட கண்காட்சியை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், நடிகர் சத்தியராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் இந்த புகைப்படம் கண்காட்சி  ஆரம்பிக்கப்பட்டது. அழைத்தார்கள் போக முடியவில்லை. மதுரையில புகைப்பட கண்காட்சி ஆரம்பித்தார்கள் போக முடியவில்லை. தற்போது,  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்தார். வரவேண்டிய சூழ்நிலை வந்தது. கோவைக்கு மாசம் ஒருமுறை வருவேன்.

இதையும் படிங்க: மக்களுக்கான திட்டங்களை கொண்டு வருவதற்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் - அமைச்சர் குற்றச்சாட்டு

governor should act keeping in mind the welfare of the people says sathyaraj

இந்த புகைப்படம் மிகச்சிறப்பாக இருந்தது. அற்புத திராவிட வரலாற்று புகைப்படம் மிகச் சிறப்பாக உள்ளது. ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என சிலர் கூறுவார்கள். அந்த எப்.ஐ.ஆர் இங்கு சாட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 23 வயதில் சான்றிதழ்களோடு இந்த புகைப்படம் அமைக்கப்பட்டுள்ளது. தியாக வரலாறு எனக்கு பிடித்த புகைப்படம். முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் வேடமிட்டு பிரச்சார நாடகத்தில் நடித்துள்ளார். எம்ஜிஆர் அதனை பாராட்டியுள்ளார். திராவிட இயக்க வரலாறு சித்தாந்தத்தின் தெளிவு இந்த புகைப்பட கண்காட்சி.

இதையும் படிங்க: பிரமரின் வருகையை முன்னிட்டு மசனகுடியில் ஹெலிகாப்டர் ஒத்திகை

governor should act keeping in mind the welfare of the people says sathyaraj

இரண்டு ஆண்டு திமுக ஆட்சி மிகவும் திருப்திகரமாக உள்ளது. நடுத்தர மக்கள் அவர்கள் கீழே இருப்பவர்களுடன் பேசுவேன் அவர்கள் திருப்திகரமாக உள்ளது. ஒன்றரை லட்சம் பேருக்கு விவசாய மானியம், மின் இணைப்பு வழங்கி உள்ளது சிறப்பானது. ஆளுநர் அப்படி நடந்து கொள்ள வேண்டியதில்லை. ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என்று தெரியவில்லை. நல்ல காரியத்திற்கு நல்ல திட்டத்திற்கு ஆதரவாக செயல்பட வேண்டும், மக்கள் நலமே முக்கியம் அதனை மனதில் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும். மனிதாபிமானத்தோடு ஆளுநர் அணுக வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் உயிர் இழப்பு அதிகம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios