மாட்டுக்கறி சாப்பிடுறியா? அரசுப் பள்ளி மாணவியை சித்ரவதை செய்த ஆசிரியை - அதிகாரிகள் விசாரணை

கோவையில் அரசுப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவியை சக மாணவிகள் மத்தியில் மாட்டுக்கறி சாப்பிடுறியா என்று கேட்டு துன்புறுத்தியது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை.

government school teacher torture to islamic girl student in coimbatore vel

கோவை துடியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி. இன்று கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து ஆசிரியர் அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் வகுப்பு ஆசிரியர் அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதை தொடர்ந்து மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியர் அபிநயா குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியர் அபிநயா மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகவும், அப்பொழுது உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என்ற கேள்விக்கு,  மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி  தெரிவித்தற்கு "மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி" என்று ஆசிரியர் அபிநயா சொன்னதாகவும், அதற்கு  மாணவி எனது பெற்றோரை பற்றியும், தொழிலை பற்றியும் ஏன் பேசுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த ஆசிரியை அபிநயா மாணவியை கன்னத்தில் அடித்ததாகவும், புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்னை மறுபடியும் பழைய மூர்த்தியா மாத்தீடாதீங்க; அதிகாரிகளின் செல்பாட்டால் அமைச்சர் ஆவேசம்

இதுகுறித்து பெற்றோருடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரிடம் முறையிட்ட பொழுது அவரும் மிரட்டுகின்றீர்களா என்று கூறியதாகவும்,  மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று சக மாணவிகள் மத்தியில் வைத்து கேட்டும்,  சூவை  துடைக்க வைத்தும்  துன்புறுத்தியதாகவும்,  தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சமாக இருப்பதாகவும் கூறி மாணவி இன்று  கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். 

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநர், ஓட்டுநரை கற்களை வீசி தாக்கிய போதை ஆசாமிகள்

இது தொடர்பாக பேட்டி அளித்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாகவும், காவல்துறையினர் விசாரித்து உரிய அறிவுரை வழங்கியதுடன், பள்ளிக்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் மீண்டும் திரும்பவும் மாணவியை மிரட்டும் சம்பவம் நடைபெற்றதால் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே பெற்றோருடன் வந்து 7 ம் வகுப்பு மாணவி புகார் அளித்த நிலையில் இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios