Asianet News TamilAsianet News Tamil

அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநர், ஓட்டுநரை கற்களை வீசி தாக்கிய போதை ஆசாமிகள்

திருப்பூரில் அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்கச் சொன்ன நடத்துநர் மற்றும் ஓட்டுநரை இளைஞர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

2 young man arrested who beat government bus conductor and driver in tirupur district vel
Author
First Published Nov 22, 2023, 12:01 PM IST

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பருத்தியூர் கிராமத்தில் இருந்து 33 என்ற தட எண் கொண்ட அரசு பேருந்து பயணிகளை ஏற்றிகொண்டு உடுமலையை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்போது தேவனூர் புதூர் நிறுத்தத்தில் குடிபோதையில் ஏறிய இளைஞர்கள் மூவரிடம் நடத்துநர் டிக்கட் எடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் எங்களை இலவசமாக அழைத்து செல்லுங்கள் என அந்த இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் நடத்துநருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அடுத்த நிறுத்ததில் நடத்துனர் இளைஞர்களை இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின் தொடர்ந்து வந்து ஒட்டுநர் பிரபாகர் மற்றும் நடத்துநர் குமார் ஆகியோர் மீது செங்கல் மற்றும் கற்கல் கொண்டு தாக்கியுள்ளனர். உடனடியாக சுதாரித்த பயணிகள் ஒட்டுஞர், நடத்துநர் இருவரையும் மீட்டு அரசுமருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் இளைஞர்களை மடக்கி பிடித்தனர். விசாரனையில் அவர்கள் கரட்டூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன்(வயது 22) மற்றும் கோட்டூர் பகுதியை சார்ந்த மகேந்திரபிரசாத்(19) என்பதும் தெரியவந்தது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்த போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ரஞ்சித் என்பவரை தேடிவருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதனிடையே கையில் கற்கலுடன் இளைஞர்கள் சுற்றும் வீடியே வளைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios