Asianet News TamilAsianet News Tamil

சேலம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து; நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றம்

சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

fire accident at salem government hospital patient shifted other wards vel
Author
First Published Nov 22, 2023, 10:22 AM IST | Last Updated Nov 22, 2023, 11:07 AM IST

மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி சேலத்தில் 1986 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஏக்கர் பரப்பளவில் இந்த மருத்துவமனை அமைந்துள்ள நிலையில் இங்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இப்படியான நிலையில் சேலம் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முதல் தளத்தில் ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததா.? துர்நாற்றம் வீசியது ஏன்.? குடிநீர் தொட்டியை இடிக்க காரணம் என்ன.?

மேலும் தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios