- Home
- Tamil Nadu News
- தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
தலை துண்டிக்கப்பட்டு காவல் ஆய்வாளர் படுகொ*ல: அதிமுக MLA தோட்டத்தில் நடந்த பகீர் சம்பவம்
திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் ஆய்வாளர் சண்முகவேல் அதிமுக எம்எல்ஏ.வின் தோட்டத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சிறப்பு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் சண்முகவேல். இவர் நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது இரவு 11.30 மணியளவில் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பில் சிக்கனூர்த்தி பகுதியில் அமைந்துள்ள அதிமுக மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தோட்டத்தில் தந்தை, மகன் இடையே சண்டை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்டித்த சண்முகவேல்
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு ஆய்வாளர் சண்முகவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளார். அவருடன் காவலர் ஒருவரும் சென்றதாக சொல்லப்படுகிறது. சம்பவ இடத்தில் மது அருந்திவிட்டு சண்டையில் ஈடுபட்ட நபர்களை சண்முகவேல் கண்டித்து சண்டையை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது.
தலை துண்டிக்கப்பட்டு படுகொலை
சண்டை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து சண்முகவேல் அப்பகுதியில் இருந்து புறப்படத் தயாரான நிலையில், திடீரென ஒரு கும்பல் காவல் ஆய்வாளர் மீது சரமாரியாக வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் SI சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணை
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த SI, MLA தோட்டத்தில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.