Asianet News TamilAsianet News Tamil

நூலிழையில் உயிர் தப்பிய காட்டு யானை; வெளியான அதிர்ச்சி வீடியோ

ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து நொடி பொழுதில் யானை கீழே இறங்கி உயிர் தப்பும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

forest elephant makhna escaped in train accident in coimbatore
Author
First Published Mar 1, 2023, 11:28 AM IST

விவசாய பயிர்களை சேதப்படுத்துவதாக கூறி தர்மபுரி பகுதியில் பிடிக்கப்பட்ட மக்னா யானை கடந்த 5ம் தேதி ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. இதனை அடுத்து 6ம் தேதி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா  யானை அங்கிருந்து கீழே இறங்கி சேத்துமடை உள்ளிட்ட பகுதியில் சுற்றி வந்தது. 

பின்னர் மீண்டும் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை அடுத்த மானாம்பள்ளி மந்திரி மட்டம் என்ற வனப்பகுதியில் மக்னா யானை விடப்பட்டது. இதனிடையே டாப்சிலிப் பகுதியில்  இருந்து கோவை வரும் வரை அந்த யானையை பின் தொடர்ந்து வந்த பொள்ளாச்சி வனத்துறையினர் அதனை அங்கேயே தடுத்து நிறுத்த தவறியதால் கோவை நகருக்குள் புகுந்ததாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். 

9ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

இந்நிலையில் கிணத்துக்கடவு பகுதியில் இருந்து கோவைக்கு வந்த மக்னா யானை மதுக்கரை அருகே திடீரென ரயில் தாண்டவாரத்தில் நின்றது. அப்போது கேரளா செல்லக்கூடிய அதிவேக விரைவு ரயில் வந்த நிலையில் அங்கிருந்த மதுக்கரை வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டு நொடி பொழுதில் யானையின் உயிரை காப்பாற்றியுள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காட்சியில்  தண்டவாளத்தில் நிற்கக்கூடிய மக்னா யானையை வனத்துறையினர் வேறு பக்கம் விரட்ட கடும் முயற்சி மேற்கொள்வதும், ரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து நொடி பொழுதில் யானை கீழே இறங்கி உயிர் தப்பும் காட்சி சினிமாவை மிஞ்சும் அளவில் உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios