அரியலூரில் 9ம் வகுப்பு மாணவி கற்பழிப்பு; ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
அரியலூர் மாவட்டத்தில் 9ம் வகுப்பு மாணவியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 22). இவர் தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து வளர்ந்து வந்துள்ளார். அப்போது நாகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியிடம் உன்னை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். அதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவிக்கவே, தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
3 பள்ளி மாணவர்கள் உயிரை பறித்த தனியார் கல்லூரி மாணவன் கைது.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!
இதற்கு பயந்து மாணவியும், லட்சுமணனும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் வீட்டில் தெரியவரவே மாணவியின் பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து லட்சுமணனுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த லட்சுமணன் ஆசை வார்த்தை கூறி மாணவியை தன்னுடன் அழைத்துச் சென்று கடந்த 18/7/2022ம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் குற்றவாளி லட்சுமணனுக்கு ஆயுள் தண்டனையும், 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும்,பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.7 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.