3 பள்ளி மாணவர்கள் உயிரை பறித்த தனியார் கல்லூரி மாணவன் கைது.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!
வேலூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 7 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். காரை சந்தோஷ் என்ற மாணவர் ஓட்டி சென்றுள்ளார். கார் வளையாம்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது மோதியது.
வாணியம்பாடி அருகே வளையம்பட்டு பகுதியில் கார் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் காரை வேகமாக ஓட்டி வந்த தனியார் கல்லூரி மாணவன் சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த மாணவ. மாணவிகள் பலர் கிரி சமுத்திரதத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். இவர்கள் தினமும் சைக்கிளில் பள்ளிக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல 8-ம் வகுப்பு மாணவர்கள் விஜய் (13), விஜய் (13), ரபிக் (13) ஆகியோர் சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர்.
இதையும் படிங்க;- அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!
அப்போது, வேலூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 7 பேர் ஏலகிரிக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். காரை சந்தோஷ் என்ற மாணவர் ஓட்டி சென்றுள்ளார். கார் வளையாம்பட்டு பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சைக்கிளில் சென்று கொண்டிருந்த 3 பள்ளி மாணவர்கள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையும் படிங்க;- சென்னையில் செல்போன் பேசி படி தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவி.. ரயில் மோதியதில் உடல் சிதறி பலி..!
பின்னர், விபத்தை ஏற்படுத்திய கார் சாலையோர மரத்தின் மீது மோதி நின்றது. விபத்தை ஏற்படுத்திய நபர்கள் அங்கிருந்து தப்பித்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய தனியார் கல்லூரி மாணவன் சந்தோஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.