கோவையில் தாக்க வந்த யானை குழந்தையின் அழுகுரலை கேட்டு திரும்பி சென்ற அதிசயம்

கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில் பெண் ஒருவரை தாக்குவதற்காக கீழே தள்ளிய நிலையில், குழந்தையின் அழுகுரலைக் கேட்டு திரும்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

forest elephant attack lady in coimbatore

கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வெளியேறும் யானைக் கூட்டங்கள் மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் உணவு மற்றும் தண்ணீருக்காக படை எடுத்து வருகின்றன.  மேலும் தற்போது தடாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  முகாமிட்டுள்ளதால் இந்த யானைகள் அருகில் உள்ள பெரிய தடாகம், வரப்பாளையம் வீரபாண்டி, சோமையனூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து வருகின்றன. 

இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு இன்று அதிகாலை 4 மணி அளவில்  சோமையனூர் பகுதியில் உள்ள நல்லதம்பி  என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது பின்னர் வீட்டின் அருகே இருந்த வாழை மரத்தை சாப்பிட்டுள்ளது. மேலும்  வீட்டு சுவற்றின் அருகே வந்து பிளிறியதால் வீட்டின் உள்ளே இருந்த பாலாமணி என்பவர் பயத்தில் தனது தம்பியின் குழந்தையை தூக்கிக் கொண்டு  வெளியே ஓடினார். 

பொள்ளாச்சியில் பயங்கரம்: பிரிட்ஜ் வெடித்து காவல் ஆய்வாளர் உள்பட 2 பேர் உடல் கருகி பலி

இதனைப் பார்த்த யானை பாலாமணியை துரத்தி கீழே தள்ளியது அப்போது குழந்தை பயத்தால் அலறியுள்ளது. குழந்தையின் அழுகுரலைக் கேட்ட யானை அங்கிருந்து சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் பாலாமணி மற்றும் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். யானை தள்ளியதில்  பாலாமணிக்கு முதுகில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை எவ்வித காயமும் இன்றி தப்பியது.

ஜெயலலிதாவை விட எனது மனைவி ஆயிரம் மடங்கு பவரானவர்: அண்ணாமலை அதிரடி!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios