Asianet News TamilAsianet News Tamil

Coimbatore: மேடை நடனம் என்ற பெயரில் கோவில் திருவிழாக்களில் ஆபாச நடனம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோவையில் மேடை நடன நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனமாடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடக கலைஞர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

Drama artist demand action against people who performs obscene dance in temple festivals in coimbatore vel
Author
First Published Jul 3, 2024, 4:57 PM IST

கோவில் திருவிழா மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஆபாச நடனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததைத் தொடர்ந்து ஆபாச நடனம் உள்ளிட்டவை நடத்தப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில்  பொது நிகழ்வுகளில் சிலர் ஆபாச நடனங்களில்  ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது.  இந்நிலையில் கோவை  மாவட்ட மேடை நடன கலைஞர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

உயிர்த்தெழுவார் என்ற நம்பிக்கையில் தாயின் உடலுக்கு பூஜை செய்த மகன்? தோல்வியில் முடிந்தததால் மகன் விபரீத முடிவு

எம் ஜி ஆர், விஜயகாந்த், எம் ஆர் ராதா உள்ளிட்டோர் வேடம் அணிந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலிவலகத்திற்கு மேடை கலைஞர்கள் மனு அளிக்க வந்திருந்தனர். தங்கள் துறைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிலர், மேடை கலைஞர்களுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக கலாசார சீர்கேடு ஏற்படும் வகையில் நீதிமன்ற உத்தரவை மீறி ஆபாச நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ஊர் கட்டுப்பாட்டை மீறி காவல் நிலையத்தை அணுகிய குடும்பம்; ஊரை விட்டு ஒதுக்கி வைத்த நாட்டாமை

இது போன்ற நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியரிடம் மேடை கலைஞர்கள் மனு அளித்தனர். இதே போல முறைப்படி விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் மேடைக் கலைஞர்களுக்கு உரிய அனுமதி வழங்கிட வேண்டும் எனவும் மேடை கலைஞர்கள்  வலியுறுத்தினர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென கலைஞர்கள் திரை பிரபலங்களின் வேடமணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios