தரமற்ற சாலை; கேள்வி கேட்ட பொதுமக்கள் மீது திமுக கவுன்சிலர் சரமாரி தாக்குதல்

கோவை மாவட்டம் கொண்டையம்பாளையம்  லட்சுமி கார்டன் பகுதியில் தரமற்ற சாலை போடப்பட்டது குறித்து கேள்வி கேட்ட பொதுமக்களுக்கு திமுக கவுன்சிலர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

dmk councillor attack youngsters who questioned about poor road in coimbatore

கோவை மாவட்டம் கோவில்பாளையத்தை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார், கார்த்திக், ஜீவா உள்ளிட்டோர் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலை குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். 

இதனால் கவுன்சிலர் மோகன், தரப்பைச் சேர்ந்த சிலருக்கும், தரமற்ற சாலை குறித்து கேள்வியெழுப்பிய பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒரு கட்டத்தில் திமுக கவுன்சிலர் மோகன் கேள்வி எழுப்பிய பொதுமக்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய மூவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் அதிடிர கைது.. என்ன காரணம் தெரியுமா?

சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை குறித்து கேள்வியெழுப்பிய பொதுமக்களை திமுக கவுன்சிலர் தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

OPS, EPS இருவரையும் சந்தித்து அகம் மகிழ்ந்தேன்! கேக்கும் போதே ஆச்சரியமாக இருக்கா? ட்விஸ்ட் வைத்த பூங்குன்றன்.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios