Asianet News TamilAsianet News Tamil

பிரபல ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரன் அதிரடி கைது.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் திடீரென தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

rathna stores owner Sivasankaran arrested
Author
First Published Feb 11, 2023, 9:52 AM IST

சென்னை புரசைவாக்கம் ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் திடீரென தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையின் பிரபல நிறுவனங்களில் ஒன்று ரத்னா ஸ்டோர்ஸ். திருநெல்வேலியிலிருந்து பாத்திரத் தொழிலை மூலதனமாகக் கொண்டு வந்த ஒரு குடும்பத்தினர் நடத்தி வந்த கடை அது. நம்பிக்கை, கைராசி சென்டிமென்ட்...என்கிற வகையில் வீட்டுப் பாத்திரங்கள் மற்றும் பொருள்கள் விற்பனையில் கஸ்டமர்கள் மத்தியில் குறிப்பாக வீட்டுப் பெண்கள் மத்தியில் பிரபலமான கடையாக திகழ்ந்து வந்தது. 72 வருடம் பாரம்பர்யம் கொண்டது. சென்னையில் பாண்டிபஜார், தாம்பரம், உஸ்மான் ரோடு, புரசைவாக்கம், வடபழனி, கே.கே.நகர் மற்றும் திருச்சி உள்ளிட்ட இடங்களில் கிளைகள் உள்ளது. 

இதையும் படிங்க;- தி.மலையில் சோகம்! மின் கம்பத்தில் ஏறிய ஊழியர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு கீழே விழும் காட்சி.!

rathna stores owner Sivasankaran arrested

இந்நிலையில், ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கர் தூத்துக்குடியில் இயங்கி வரும் ராஜம் பைனான்ஸ் நிறுவனத்திடமிருந்து மொத்தம் ரூபாய் 60 லட்சம் கடன் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட பைனான்ஸ் நிறுவனத்தினரை கெட்ட வார்த்தையில் திட்டி கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக ராஜம் பைனான்ஸ்  சார்பில் பிரபாகரன் என்பவர் தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இதையும் படிங்க;-  கசாப்புக்கடைக்காரனை நம்பிப் போகலாம்.. காமுகனை நம்பி தான் போகக்கூடாது.. ஜெயக்குமாரை பங்கம் செய்த புகழேந்தி.!

rathna stores owner Sivasankaran arrested

இந்த புகாரின் அப்படிடையில் சென்னையில் இருந்த ரத்னா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சிவசங்கரிடம் தூத்துக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவரது மனைவி வாசுகியும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரிடம் விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios