கசாப்புக்கடைக்காரனை நம்பிப் போகலாம்.. காமுகனை நம்பி தான் போகக்கூடாது.. ஜெயக்குமாரை பங்கம் செய்த புகழேந்தி.!
ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளதாக தெரிவிதார். மேலும், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் பேசுவதாக விமர்சித்தார்.
பெண்கள் ஜெயக்குமாரை கண்டால் பயந்து ஓடுகிறார்கள் அலறி அடித்து ஒடுகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகார் அளித்தார். இதனையடுத்த, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார்;- ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளதாக தெரிவிதார். மேலும், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் பேசுவதாக விமர்சித்தார்.
தென்னரசு என்ற பெயரையே சொல்ல வலிக்கிறது. இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது என்பது முரண்பாடானது. அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த புகழேந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்;- கசாப்புக்கடைக்காரருடன் போவதுகூட தப்பில்லை. ஆனால், காமுகன் கூட போவதுதான் தப்பு என்பதை ஜெயக்குமாருக்கு சொல்லிக்கொள்கிறேன். பெண்கள் ஜெயக்குமாரை கண்டால் பயந்து ஓடுகிறார்கள். இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொண்டே பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலில் தோல்வியை தழுவினார். இரட்டை இலை சின்னத்தை வைத்து கட்சியை நாசம் செய்துவிட்டார். ஈரோடு இடை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டு வெற்றி பெறாவிட்டால் அதிமுக அலுவலக சாவியை ஓபிஎஸ்யிடம் கால் அடியில் ஒப்படைக்க வேண்டும் எனவும் புகழேந்தி ஆவேசமாக கூறினார்.