Velliangiri Hills: சிவனை தரிசிக்க வெள்ளியங்கிரியில் மலை ஏறிய பக்தர் உயிரிழப்பு; கோவையில் தொடரும் சோகம்

கோவை வெள்ளியங்கிரி மலையில் சிவனை தரிசித்துவிட்டு கீழே இறங்கும்போது மலையில் தவறி விழுந்த பக்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Devotee who fell on Coimbatore Velliangiri hill died without treatment vel

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்ககூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த 18ம் தேதியன்று காலை திருப்பூர் எஸ்.வி. காலணி பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்ற 31 வயதான நபர், தனது நணபர்களுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறியுள்ளார். ஏழு மலைகள் ஏறி சாமி தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கும் போது, ஏழாவது மலையில் இருந்து தவறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவரது வயிறு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

மேட்டுபாளையத்தில் இளைஞர் மீது காரை ஏற்றி படுகொலை, இருவர் படுகாயம் - மர்ம நபர்கள் வெறிச்செயல்

இதனைப் பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவில் நிர்வாகத்திற்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் சுமை தூக்கும் பணியாளர்கள் அவரை மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூகம் பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் வீரகுமார், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். 

ஷாக்கிங் நியூஸ்! மதுரை சித்திரை திருவிழாவில் ஸ்கெட்ச் போட்டு இளைஞர் கொலை! அலறி ஓடிய பக்தர்கள்? நடந்தது என்ன?

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், வீரக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  பின்னர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனையில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios