மாயமான ஏழாம் வகுப்பு சிறுமி… தனிப்படை அமைத்து தேடி வந்த காவல்துறை…பொள்ளாட்சி அருகே சிறுமி மீட்பு!!
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டுள்ளார்.
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டுள்ளார். கோவை ராமநாதபுரம் அடுத்த ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சுதாகரன். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், 12 வயதில் ஸ்ரீநிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். ஸ்ரீநிதி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது ஸ்ரீநிதி தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னை ஜாபர்கான்பேட்டையில் திடீரென தீப்பிடித்த டிரான்ஸ்பார்மர்! ஆட்டோ, கடை தீயில் நாசம்!
சசிகலா வேலை முடித்துவிட்டு வெளியில் வந்து பார்த்தபோது மகள் ஸ்ரீ நிதியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சசிகலா, தனது கணவருக்குத் தகவல் அளித்ததை அடுத்து இருவரும் அனைத்து இடங்களிலும் தேடியும் ஸ்ரீநிதி கிடைக்கவில்லை. இதை அடுத்து சிறுமியின் தாய் சசிகலா கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராய உயிரிழப்புகள் எதிரொலி... புதுச்சேரி ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு
மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர் ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் சிறுமியை கண்டுப்பிடிக்க 6 தனி படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமி ஸ்ரீநிதியை காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதை அடுத்து சிறுமி கோவை மாநகர காவல்துறை வசம் ஒப்படைக்கபட்டார். சிறுமியை கோவை அழைத்து வரும் காவல்துறையினர் அவர் கிடைத்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்தனர். இதை அடுத்து சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.