கோவையில் எலக்ட்ரானிக் சிக்னல்களுக்கு பதிலாக காவலர்கள்... விரைவாக போக்குவரத்தை சரி செய்ய நடவடிக்கை!!
மணிக்கு 3 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு சிக்னல்கள் இல்லாமல் ரவுண்டானா அமைத்து போக்குவரத்து வேகப்படுத்தப்பட்டு வருவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மணிக்கு 3 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு சிக்னல்கள் இல்லாமல் ரவுண்டானா அமைத்து போக்குவரத்து வேகப்படுத்தப்பட்டு வருவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ராமநாதபுரம் காவல் நிலைய சோதனை சாவடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறையை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்து நடைபெறும் இடங்கள் பெண்களுக்கு எதிரான மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது… பிஆர்.பாண்டியன் வலியுறுத்தல்!!
இதன் மூலம் ஸ்நேட்சிங், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகிவை குறைந்து வருகிறது. அதேபோல குற்றங்கள் நடந்தாலும் அதை கண்டுபிடிக்க சிசிடிவி கேமராக்கள் உதவியாக இருக்கிறது. தேவைக்கேற்றபடி புதிய கேமராக்களை அமைத்து வருகிறோம். கோவை மாநகரில் மொத்தமாக 20,000க்கும் மேற்பட்ட கேமராக்கள் உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 3 ஆயிரம் கேமராக்கள் அமைத்துள்ள நிலையில் முக்கிய சாலைகள் மற்றும் கடைவீதி சாலைகள் உள்ளிட்ட இடங்களில் உள்ள கேமிராக்களை கண்ட்ரோல் ரூமுடன் இணைத்துள்ளோம்.
இதையும் படிங்க: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை!!
கோடை வெயில் அதிகரித்து வருவதால் வெயில் நேரத்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் சிக்னல்களில் காத்திருக்காமல் இருக்க எலக்ட்ரானிக் சிக்னலுக்கு பதிலாக காவலர்கள் மூலம் மேனுவல் சிக்னலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவைக்கேற்றபடி சிக்னல் நேரம் குறைக்கப்படும். சிக்னல்கள் அதிகமான நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதோ அந்த இடங்களில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை வேகப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். மணிக்கு 3 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு சிக்னல்கள் இல்லாமல் ரவுண்டானா அமைத்து போக்குவரத்து வேகப்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.