மிக்ஜாம் புயல் பாதித்த மக்களுக்காக தன்னார்வலர்களுடன் கைகோர்த்த கோவை போலீஸ்
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை விவகாரத்தில் முக்கிய குற்றவாளி தருமபுரி வனப்பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக மாநகரக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோவை மாநகர காவல் துறை சார்பிலும், பொதுமக்கள் வழங்கிய பொருட்களும் சேர்த்து ரூ.5.74 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் காவல் துறை வாகனத்தில் இன்று சென்னை அனுப்பபட்டது. ரூ.2 லட்சம் மதிப்புள்ள உடை, பொருட்களும். ஒரு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருட்களும், ரூ.79 ஆயிரம் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களும், 61 ஆயிரம் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களும் மொத்தமாக ரூ.5 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் தயார் செய்யப்பட்டு லாரி மூலம் அனுப்பப்படுகின்ற நிவாரண பொருட்களை கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளி இன்னும் பிடிபடவில்லை. ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பெரும்பாலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முக்கிய குற்றவாளி பிடிப்படாவிட்டாலும் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள தலைநகரை தமிழ் உறவுகள் ஓடிவந்து உதவ வேண்டும் - சீமான் கோரிக்கை
5 தனிப்படைகள் தொடர்ந்து தேடி வருகின்றனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் கொள்ளையன் விஜய் காட்டு பகுதியில் பதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜயின் தந்தை தருமபுரியில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை விசாரணையால் அவர் உயிரிழப்பு என்று இதுவரை எந்தவித புகாரும் கொடுக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதனிடையே தருமபுரி வனப்பகுதியில் கொள்ளையன் விஜயை தனிப்படை போலீசார் நேற்று சுற்றி வளைத்த போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தப்பிய கொள்ளையன் விஜய், தருமபுரியில் உறவினர் வீட்டிலும் நகையை திருடி விட்டு தப்பியுள்ளார். சுமார் 20 சவரன் நகையை திருடிவிட்டு தப்பிய விஜய் தனிப்படை போலீசாரால் தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.