தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது… அமைச்சர் உதயநிதி கருத்து!!
தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்வதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்வதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை கொடிசியா மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 20 துறைகளின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் கோவை மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென்னிந்திய மான்செஸ்டர் கோவை, உழைப்பால் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது. கோவைக்கு எத்தனையோ முறை வந்தாலும் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு முதல் சுற்று பயணம் இன்று கிறிஸ்துமஸ் திருநாளில் கோவையில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
இதையும் படிங்க: வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசாத தளபதி விஜய் - திமுகவை வம்புக்கு இழுக்கும் விஜய் ரசிகர்கள்!
இன்றைய விழாவில் 25,042 பயனாளிகள் 368 கோடி ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது. அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக அரசு நிர்வாகம் செயலற்று கிடந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைக்கு பொறுப்பு அமைச்சராக முதல்வர் கொடுத்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மாதம் ஒரு முறை கோவைக்கு வருவேன் என வாக்குறுதி கொடுத்திருந்தேன். ஆனால் இதுவரை ஆறு ஏழு முறை கோவைக்கு வந்துள்ளேன். இதுவரை 1,57,575 மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. 24 மணி நேரம் கட்டுப்பாடு அறையை திறந்து கோவை மக்களின் குறைகளை தீர்த்து வருகிறார். மின் நுகவோர் சேவை மையமான மின்னகம் மூலம் 13,37,679 மனுக்கள் பெறப்பட்டு அதில் 13,29,565 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: உதயநிதிக்காக நடப்பட்ட கொடிக்கம்பத்தில் மின்சாரம் தாக்கி தொண்டர் பலி
கிட்டத்தட்ட மீன்னகம் மூலம் 100 சதவீதம் தீர்வு பெறப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகள் அதிமுக ஆட்சியில் 2.20 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 1.5 லட்சம் இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதியில் ஒரு திமுக எம்.எல்.ஏ இல்லை என நினைத்திருந்தோம். ஆனால் அவை பொய் என சொல்லும் அளவிற்கு நிரூபித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் கோவைக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிக நலத்திட்டங்களை பெற்ற மாவட்டமாக கோவை திகழ்கிறது என்று தெரிவித்தார்.