Asianet News TamilAsianet News Tamil

கோவை, சென்னை இன்டர்சிட்டி ரயில் செவ்வாய் கிழமைகளில் காட்பாடி வரை மட்டுமே இயக்கம் - அதிகாரிகள் விளக்கம்

கோவை - சென்னை இடையேயான இன்டர்சிட்டி விரைவு ரயில் அடுத்து வரும் குறிப்பிட்ட சில தினங்களுக்கு காட்பாடி வரை மட்டுமே இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவித்துள்ளது.

coimbatore chennai intercity express train service partially cancelled in upcoming selected days
Author
First Published Jul 10, 2023, 11:52 AM IST

ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக பகல் நேரத்தில் இயக்கப்படும் ரயில் சேவைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன்படி ஈரோடு ஜோலார்பேட்டை இடையேயான பயணிகள் ரயில் சேவை 11ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

அதே போல் கோவை - சென்னை சென்ட்ரல் இடையேயான இன்டர்சிட்டி விரைவு ரயில் சேவையானது வருகின்றன 11, 18, 25 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் பாதியாக ரத்து செய்யப்பட்டு காட்பாடி - சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநருக்கு வலிப்பு ஏற்பட்டதால் விபத்து; வேன் கவிழ்ந்து 16 பெண்கள் காயம்

இதனால், கோவையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்படும் கோவை - சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் வருகின்ற 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் கோவை - காட்பாடி வரை மட்மே இயக்கப்பட உள்ளது. மறு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பகல் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய இன்டர்சிட்டி விரைவு ரயில் 11, 18, 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் சென்னைக்கு பதிலாக காட்பாடியில் இருந்து இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் நீராட்டு விழாவிற்கு கண்டெய்னர் லாரியில் சீர்வரிசை கொண்டு வந்த தாய்மாமன்

Follow Us:
Download App:
  • android
  • ios