Asianet News TamilAsianet News Tamil

Civil service exam : கோவையில் தேர்வை எதிர்கொள்ளும் 9 மாத கர்ப்பிணி பெண்

கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்விற்கு 7,742 நபர்கள் பதிவு செய்துள்ளனர். 

Civil service exam: 9 months pregnant woman who appeared in Coimbatore
Author
First Published May 28, 2023, 11:24 AM IST

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் சிவில் சர்விசஸ் முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்விற்கு 7,742 நபர்கள் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய மாவட்ட ஒருங்கிணைப்பு பார்வையாளர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் துணை ஆட்சியர் முன்னிலையில் 7 உதவி ஒருங்கிணைப்பு மேற்பார்வையாளர்கள், வட்டாட்சியர் நிலையில்  18 தேர்வு மையங்களுக்கும் தலா ஒரு தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 39 தேர்வு மைய உதவி கண்காணிப்பாளர்கள், 341 அறைகண்காணிப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலமும், மேலும் 341 அறைகண்காணிப்பாளர்கள் தேர்வுமைய காணிப்பாளர்கள் மூலமும் மொத்தம் 682 அறைகண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜய்குமார் கங்காபூர்வாலா பதவியேற்பு.!பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்

மேலும், தேர்வை பார்வையிடும் வகையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் துணை இயக்குநர் நிலையில் அலுவலர் ஒருவரும் மற்றும் மாநில அரசின் சிறப்பு கண்காணிப்பாளர் ஒருவரும் தேர்வின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையினரால் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து தேர்வு  மையங்களிலும் சிக்னல் ஜாமர்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கவிதா என்ற ஒன்பது மாத கர்ப்பிணி பெண் இத்தேர்வினை எழுதுகிறார். இதுகுறித்து கவிதா பேசிய போது “ ஏற்கனவே 5 ஆண்டுகளுக்கு முன்பு இத்தேர்வினை எதிர்கொண்டதாகவும் பின்னர் திருமணம் ஆகி விட்டதாலும் குடும்ப சூழ்நிலை காரணமாகவும் தேர்வினை எழுத முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இத்தேர்வினை எழுதியே ஆக வேண்டும் என உறுதியாக இருந்தேன். இதற்கு தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் பக்கபலமாக இருந்தனர். மேலும் பெண்கள் அனைவரும் அவர்களது இலக்கினை நோக்கி முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான யுபிஎஸ்சி தேர்வு தொடங்கியது..! தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் பங்கேற்பு

Follow Us:
Download App:
  • android
  • ios