மக்கள் அடையாளம் காணாத எங்கள் திறமையை மத்திய அரசு அறிந்து ஆளுநர் ஆக்கி வருகிறது... தமிழிசை கருத்து!!
தமிழக மக்கள் எங்களை போன்ற திறமையானவர்களை அங்கீகரிக்கவில்லை என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் எங்களை போன்ற திறமையானவர்களை அங்கீகரிக்கவில்லை என தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநர்கள் பிரதமரால், உள்துறை அமைச்சரால் பரிசீலிக்கப்பட்ட பின், அதன் மூலம் ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்கிறார்கள். தமிழக மக்கள் திறமையை அடையாளம் கண்டு கொள்ளவில்லை.
இதையும் படிங்க: பணியில் இருந்த பெண் ரயில்வே ஊழியர் கற்பழிக்க முயற்சி; கேரளா வாலிபர் அதிரடி கைது
தமிழக மக்கள் அடையாளம் கண்டு கொண்டு, எங்களை போன்றோரை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கி இருந்தால் எங்களை மந்திரி ஆக்கி இருப்பார்கள். எனவே திறமையாளர்களை வீணடிக்க வேண்டாம் என ஆளுநர் ஆக்குகிறார்கள். ஆக எங்கள் மீது தப்பு இல்லை. தமிழக மக்கள் நல்லவர்களை தயவு செய்து அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: காவலர்களை தாக்க நினைப்பவர்களுக்கு திருச்சி துப்பாக்கிச்சூடு ஒரு பாடம்; ஆணையர் எச்சரிக்கை
எங்களைப் போன்றவர்கள் நிர்வாக திறமை உள்ளவர்கள். பேஸ்புக்கில் ஆயிரம் ஓட்டு வாங்க முடியாதா 1000, 2000 ஓட்டு வாங்க முடியாதா? என எழுதுவீர்கள். அது யார் தவறு. மக்கள் திறமையானவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். பணியாளர்கள் வட இந்தியாவில் இருந்து வருவதற்கு யார் வாய்ப்பு கொடுக்கிறார்கள். அந்த சிந்தனை வந்தால் அதைப் பற்றி பேசுவோம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விக்கு அண்ணாமலை இடம் கேட்கலாம் நான் ஆளுநர் என்று தெரிவித்தார்.