பணியில் இருந்த பெண் ரயில்வே ஊழியர் கற்பழிக்க முயற்சி; கேரளா வாலிபர் அதிரடி கைது
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் பணியில் இருந்த பெண் ஊழியரை கற்பழிக்க முயன்ற கேரளா மாநில இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள நெல்லை - தென்காசி சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட்டில் கேட் கீப்பராக பணியாற்றி வந்த கேரளாவைச் சேர்ந்த நித்யா சந்திரன் என்ற பெண் ரயில்வே ஊழியரை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர், பணியில் இருந்த போது, கற்பழிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து தென்காசி ரயில்வே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து நித்யா சந்திரனை கற்பழிக்க முயற்சி செய்தது யார்? என்பது குறித்து அக்கம் பக்கத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், நித்யா சந்திரனை கற்பழிக்க முயற்சி செய்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பத்னாபுரம் தாலுகா வாழவிளை பகுதியை சேர்ந்த அனீஸ் (வயது 28) என்ற நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பண மோசடி புகாரில் கரூர் அதிமுக பிரமுகர் அன்புநாதன் கைது
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அனீஸ், கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்ததாகவும், அப்பொழுது, பாவூர்சத்திரம் பகுதியில் தங்கிருந்தபோது, தினமும் நித்யா சந்திரனை நோட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெயிண்ட் அடிக்கும் பணி முடிந்து கேரளாவிற்கு திரும்ப செல்ல இருந்த சூழலில், நித்யா சந்திரன் தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட அனிஸ், அவரை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார்.
300க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து விநோத வழிபாடு
ஆனால், அவர் கூச்சலிடவே பயத்தில் அங்கிருந்து அவர் தப்பி ஓடியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனீஸ் மீது கேரள மாநிலம் குன்னிகோடு காவல் நிலையத்தில் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.