சரக்கு வாகனம் மீது மோதி கவிழ்ந்து விழுந்த கார்; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
கோவை மாவட்டம் துடியலூர் அருகே வேகமாக வந்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது மோதி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை துடியலூர் அருகே அது வேகமாக வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ மற்றும் நடந்து சென்று கொண்டிருந்தவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடந்து சென்ற கட்டிட தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூரை அடுத்த வடமதுரை பகுதியில் நேற்று மதியம் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் சாமிதாஸ்(தேவாலய பாஸ்டர்) என்பவர் காரில் மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம்
கார் துடியலூர் அடுத்துள்ள என்.ஜி.ஜி.ஓ. காலனி கேட் அருகே வரும்போது கட்டுப்பாட்டை இழந்து அங்கு சாலையோரம் நின்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோவின் மீது மோதி சாலையில் தலை குப்புற கவிழ்ந்தது. மேலும் அங்கு நடந்து சென்று கொண்டிருந்த நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சக்திவேல் என்பவர் மீதும் மோதியது.
கலைஞரை தனது அண்ணனாக பாவித்து கருணாநிதிக்கு இசை அஞ்சலி செலுத்திய துப்பரவு தெழிலாளி
இதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் காரை ஓட்டி வந்த பாஸ்கர் சாமிதாஸ் வலது கையில் மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் காவல்துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கார் விபத்து நடைபெற்ற காட்சி அருகில் இருந்த பேக்கரி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.