Asianet News TamilAsianet News Tamil

நீங்க மட்டும் தான் பல மொழி பேசுவீங்களா? எனக்கும் தெரியும்பா... இந்தியில் வாக்கு சேகரித்த அண்ணாமலை

கோவை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை இந்தியில் பேசி வாக்கு சேகரித்த சம்பவம் இந்தி பேசும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

bjp state president annamalai did election campaign at hindi in coimbatore vel
Author
First Published Apr 4, 2024, 10:16 AM IST

கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். செட்டி வீதி, பெரிய கடை வீதி, பூ மார்க்கெட் ஆகிய பகுதிகளில் திறந்த வெளி வாகனத்தில் நின்றவாறு அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அவரோடு கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக வட இந்திய மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய தெப்பக்குளம் மைதானத்தில் பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை இந்தி மொழியில் பேசி பிரசாரம் செய்தார். அப்போது வட இந்திய மக்களிடம் இந்தியில் உரையாற்றிய அண்ணாமலை, அனைவருக்கும் வணக்கம், எல்லோரும் தயவு கூர்ந்து நினைவு கொள்ளுங்கள் வரும் ஏப்ரல் 19ம் தேதி நமது தாமரையை மலர தங்களது அனைத்து குடும்பங்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைவார்கள் - டிடிவி தினகரன் நம்பிக்கை

நல்லதொரு இந்தியாவை கொண்டு வருவதற்கு, நல்ல மனிதரைக் கொண்டு வருவதற்கு, நல்ல மனிதரான மோடியை கொண்டு வருவதற்கு கோவையில் உள்ள தங்களின் குடும்பங்களின் அனைவரின் வலுவை சேர்த்து தாமரைக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

ஒரே மேடையில் நேருக்கு நேர் விவசாயம் பற்றி விவாதிக்க தயாரா.? ஸ்டாலினுக்கு சவால் விடுத்த எடப்பாடி பழனிசாமி

இதனிடையே அதிமுக சார்பில் கோவையில் போட்டியிடும் சிங்கை ராமச்சந்திரன் பிரசாரத்தின் போது இந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் பேசி வாக்கு சேகரித்த நிலையில், எனக்கும் பல மொழி தெரியும் என்பதை எடுத்துறைக்கும் வண்ணம் அண்ணாமலை இந்தியில் பேசி வாக்கு சேகரித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios