ஒரே மேடையில் நேருக்கு நேர் விவசாயம் பற்றி விவாதிக்க தயாரா.? ஸ்டாலினுக்கு சவால் விடுத்த எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருவதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு அடுத்த வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அச்சாணியாக இருக்கும் என கூறினார். 
 

Edappadi Palaniswami has challenged Stalin to discuss agriculture on a single platform KAK

திமுகவினரால் மிரட்டப்படும் மகளிர்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து தோரணைகள் பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்பொழுது கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,  அதிமுக தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத் தொகைம ஆயிரம் ரூபாய் திமுகஅரசு வழங்குகிறது.

வீட்டில் சுவர் விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் உரிமைத்தொகையை நிறுத்துவோம் என தி.மு.க.,வினர் மிரட்டி வருவதாக விமர்சித்த அவர்,  தி.மு.க.,வினர் மிரட்டினால் பெண்கள் யாரும் பயப்பட வேண்டாம் என கூறினார். 1000  ரூபாய் உரிமைத்தொகையை யாராலும் நிறுத்த முடியாது. அதற்கு  நான் பொறுப்பு. உரிமைத்தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என தெரிவித்தார். 

திருமாவளவன் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்: கமல்ஹாசன் விருப்பம்

மூத்த திமுகவினர் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்

தொடர்ந்து பேசிய அவர், கரூரில் செந்தில் பாலாஜியின் பினாமிகள் 3000 பார்களில் கள்ள மதுவை விற்றனர் ஆயுள் காலம் வரை சிறையில் இருக்கும் அளவுக்கு ஊழல் செய்திருப்பதாக தெரிவித்தார். மேலும் செந்தில் பாலாஜி செயல்வீராராம் திமுகவிற்காக உழைத்த  கட்சிக்காரர்கள் எல்லாம் ஓரம் கட்டப்பட்டிருக்கிறார்கள். 5 கட்சிக்கு போனவர்கள் செயல் வீரர் என கூறுவதாக விமர்சித்தார். திமுக ஆட்சியில் விலைவாசிகள் விண்ணை மட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஊழல் செய்வதிலும் போதைப் பொருள் விற்பனையிலும் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. 2021 தேர்தலில்திமுக வெளியிட்ட 560 வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்ற வில்லை அதிமுக கொண்டு வந்த திட்டங்களை முடக்குவது தான் திமுக ஆட்சி வாக்குறுதிகள் எல்லாம் நிறைவேற்றி விட்டதாக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என கூறினார். 

மோடியின் காமெடி டைம்... நிர்மலாவின் வாழைப்பழ காமெடி... : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு

நேருக்கு நேர் விவாதிக்க தயாரா.?

பச்சைத்துண்டு பழனிசாமி என்று மு.க. ஸ்டாலின் கிண்டல் செய்கிறார். விவசாயம் பற்றி அவருக்கு என்ன தெரியும்? என கேள்வி எழுப்பிய அவர், ஒரே மேடையில் விவசாயம் பற்றி என்னுடன் விவாதிக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் தயாரா என சவால் விடுத்தார். ஒரே ஆட்சியில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர் கடனை ரத்து செய்த ஒரே கட்சி அதிமுக தான் என கூறினார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டதால் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசி வருவதாக விமர்சித்தார்.

இந்த தேர்தல் வெற்றி அதிமுகவுக்கு அடுத்த வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அச்சாணியாக இருக்கும் எனவும் கூறினார்.அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர்கள் இது பொய் விளக்கு போட்டு கட்சி பணியும் முடக்க திமுக நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த அவர் திமுக எந்த வழக்கு போட்டாலும் சட்ட ரீதியாக சந்திக்க தயார் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios