Asianet News TamilAsianet News Tamil

அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்த பாஜக நிர்வாகிக்கு 26ம் தேதி வரை சிறை விதித்து உத்தரவு

கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் செல்வக்குமாரை கைது கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டர்.

BJP state executive jailed till 26th for defaming minister Senthil Balaji
Author
First Published Apr 12, 2023, 7:48 PM IST | Last Updated Apr 12, 2023, 7:48 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் தொழில்பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் இன்று அதிகாலை கோவையில்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும், இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டார்.

கோவை திமுகவைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் செல்வகுமார் கைது செய்யப்பட்டு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு விசாரணை துவங்கிய நிலையில் விசாரணையானது மாலை 4 மணி வரை சுமார்  8 மணி நேரத்தை கடந்தும் நடத்தப்பட்டது.

அஷ்வின் போட்ட பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இதனையடுத்து செல்வகுமார் கோவை நான்காவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பாஜகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் சண்முகநாதன் செல்வகுமாருக்காக ஆஜராகி வாதிட்டார். செல்வகுமார் மீது பொய் வழக்கு போடப்பட்டிருப்பதாகவும், பா.ஜ.க மாநில தலைவர் ஆளுங்கட்சியினரின்  ஊழல் பட்டியலை வெளியிடுவதாக அறிவித்தது இருந்த நிலையில், ஊழல் பட்டியலை தயார் செய்யும் பணியில் செல்வகுமார் ஈடுபட்டு இருந்தார். ஊழல் பட்டியல் வெளியிடப்படக் கூடாது என்பதற்காகவே செல்வக்குமார் பொய் வழக்கில் கைது  செய்யப்பட்டுள்ளார் என வாதிட்டார்.

திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை

மேலும் பாஜக சார்பில் பெயில்  மனுவும்  தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட பாஜக மாநில தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வக்குமாரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சரவணபாபு உத்திரவிட்டார். இதனையடுத்து நீதிமன்றத்தில் இருந்து செல்வகுமார் வெளியில் அழைத்து வரப்பட்டார். அப்பொழுது கஞ்சா விற்பவர்களை விட்டு விட்டு, விற்பனை  நடைபெறுவதை சொன்னதற்காக தன்னை கைது செய்திருப்பதாக கூறினார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் செல்வக்குமாரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios