அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த அஷ்வின், உதயநிதி - சமூக ஆர்வலர்கள் வரவேற்பு
சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி ஒன்றில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கிரிக்கெட் வீரர் ரவிசந்திரன் அஷ்வின் இணைந்து மாணவர்களுக்கு கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளை சொல்லி கொடுத்தனர்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சொந்த தொகுதியான சைதாபேட்டையில் உள்ள மாந்தோப்பு பகுதியில் மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட், கால்பந்து விளையாட்டுகளுக்கு பயிற்சி வழங்கும் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், மேயர் பிரியா, மேயர் ககன்தீப் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் மாணவர்களுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகள் குறித்து கற்றுத் தரப்பட்டது.
மேலும் கிரிக்கெட் மற்றும் கால் பந்து தொடர்பான விளையாட்டு உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசுகையில், “மாணவர்களுக்கு கிரிக்கெட் கற்றுத் தருவது என்னுடைய பல நாள் ஆசையாக இருந்தது. அதுமட்டுமின்றி பயிற்சி பெற விரும்பும் பல மாணவர்களுக்கு அதற்கான உபகரணங்கள் வாங்க முடியாது சூழல் இருந்தது. ஆனால் இப்போது நம்முடைய அமைச்சரின் முயற்சியால் அந்த நிலை மாறியுள்ளது.
திருச்சியில் 7 கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று - மருத்துவர்கள் எச்சரிக்கை
இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றால் மிகவும் மகிழ்ச்சி. மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் பயிற்சி எடுத்து கிரிக்கெட் விளையாடி சென்னை அணிக்காகக் கூட எதிர்காலத்தில் விளையாடலாம். மகளிர் கிரிக்கெட் லீக் கூட தற்போது நடைபெறுகிறது. அதிலும் நீங்கள் சிறந்து விளங்கலாம் என்று தெரிவித்தார்.
34 ஆண்டுகளுக்கு பின் பின் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
விழாவின் ஒரு பகுதியாக அஷ்வின் பந்து வீச, அதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டையால் பறக்கவிட்டார்.