164 பயணிகள் சென்ற விமானத்தில் மோதிய பறவைகள்... அதிர்ச்சியடைந்த விமானி.. இறுதியில் நடந்தது என்ன?
கோவை விமான நிலையத்தில் இருந்து 164 பயணிகளுடன் இன்று காலை ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் புறப்பட தயாராக இருந்து. இதனையடுத்து, விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கழுகுகள் இடது பக்க என்ஜினில் மோதியது.
கோவையில் இருந்து 164 பயணிகளுடன் ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை விமான நிலையத்தில் இருந்து 164 பயணிகளுடன் இன்று காலை ஷார்ஜாவுக்கு ஏர் அரேபியா விமானம் புறப்பட தயாராக இருந்து. இதனையடுத்து, விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது இரண்டு கழுகுகள் இடது பக்க என்ஜினில் மோதியது. இதனை சற்றும் எதிர்பாராத விமானி ஓட்டி அதிர்ச்சியடைந்த விமானத்தை உடனே நிறுத்தினர்.
இதையும் படிங்க;- கர்நாடகாவில் கார் விபத்து: 4 தமிழர்கள் உயிரிழப்பு
பொறியாளர்கள் விமானத்திற்கு ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்து வரும் நிலையில், விமானத்தில் இருந்த 164 பயணிகள் கீழே இறக்கப்பட்டனர். இரண்டு கழுகுகளில் ஒன்று இன்ஜின் பிளேடில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. முன்னெச்சரிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டதால் 164 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதையும் படிங்க;- நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து! 4 பேர் உடல்சிதறி பலி! 5 பேர் படுகாயம்.!