Asianet News TamilAsianet News Tamil

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்து! 4 பேர் உடல்சிதறி பலி! 5 பேர் படுகாயம்.!

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக்குமார். இவர் அப்பகுதியில் தில்லை பயர் ஓர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். இவர் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

Firecrackers explosion accident in Namakkal! 2 people killed
Author
First Published Dec 31, 2022, 7:35 AM IST

நாமக்கல்லில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பட்டாசு கடை உரிமையாளர், அவரது மனைவி பிரியா உள்ளிட்ட 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் தில்லைக்குமார். இவர் அப்பகுதியில் தில்லை பயர் ஓர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடைநடத்தி வருகிறார். இவர் வீட்டில் பட்டாசுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நள்ளிரவில் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் வீடு முழுவதும் தரைமட்டமாகி உள்ளது. 

இதையும் படிங்க;- பொங்கல் பரிசுத்தொகுப்பு..! மாவட்ட ஆட்சியர்களே முழு பொறுப்பு- தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு

Firecrackers explosion accident in Namakkal! 2 people killed

அந்த வீட்டின் அருகே வசித்து வந்த மூதாட்டி பெரியக்காள்(73), பட்டாசு கடை உரிமையாளர் தில்லைக்குமார், அவரது மனைவி பிரியா, தில்லைகுமாரின் தாய் செல்வி உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 5 பேரை  மீட்ட அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Firecrackers explosion accident in Namakkal! 2 people killed

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கட்டிட இடுபாடுகளில் யாரேனும் சிக்கியுள்ளர்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர். பட்டாசு வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

இதையும் படிங்க;- திருப்பூரில் மின்னல் வேகத்தில் வந்த லாரியில் சிக்கி மாணவர் பலி; பதறவைக்கும் சிசிடிவி காட்சி

Follow Us:
Download App:
  • android
  • ios