கர்நாடகாவில் கார் விபத்து: 4 தமிழர்கள் உயிரிழப்பு
கர்நாடக மாநிலத்தில் பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த தமிழர்கள் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள அகோலா என்ற இடத்தில் சனிக்கிழமை காரும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாயின. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்கட்டத் தகவலில் தெரியவந்துள்ளது. உயிரிழந்த நால்வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அவர்களின் பெயர் அருண் பாண்டியன், நிபுல், முகமது பிலால், சேகரன் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்காக கோவா சென்றுவிட்டு தமிழகம் திரும்பிக்கொண்டிருந்தபோது விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து நேர்ந்தபோது பேருந்து ஹூப்ளி நோக்கி சென்று கொண்டிருந்த்து. அப்போது எதிரே வந்துகொண்டிருந்த கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி பேருந்து மீதும் மோதியது. அங்கோலா போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடந்தி வருகிறார்கள்,