Asianet News TamilAsianet News Tamil

கனமழை மற்றும் சூறைக்காற்றால் ரூ.3 கோடி மதிப்பிலான வாழை சேதம்; விவசாயிகள் வேதனை

கோவை மாவட்டத்தில் சூரை காற்றுடன் பெய்த கன மழை காரணமாக ரூ.3 கோடி மதிப்பிலான 15 ஆயிரம் வாழை மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Banana trees worth Rs 3 crore damaged due to heavy rains and gales in coimbatore
Author
First Published Apr 1, 2023, 10:07 AM IST

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா பகுதிகளில் தானிய வகைகள், தென்னை, வாழை உள்ளிட்டவை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள பெட்டையாண்டிபுரம் சாந்தலிங்கம் என்பவரின் தோட்டத்தில் 2 ஆயிரம் வாழை மரங்கள் கன மழையால் சேதமடைந்தன. அருகே பாலக்காட்டு கணவாய் உள்ளதால் இப்பகுதிகளில் வருடத்தில் இருமழை பொழியும். விவசாயிகள் விவசாயம் செய்ய தோட்டத்தின் பத்திரம், வீட்டு பத்திரங்களை வங்கிகளில் அடமானம் வைத்து சொட்டு நீர் பாசன முறையில் விவசாயம் செய்து வருகின்றனர். 

லேடி சூப்பர் ஸ்டாராக கோவையை கலக்கும் தனியார் பேருந்து ஓட்டுநர்

கல்குவாரிகள் அதிகம் உள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் தீடீரென சூரை காற்றுடன் பெய்த கன மழையால் சுற்றுவட்டார விவசாய நிலங்களில் இருந்த சுமார் ரூ.3 கோடி மதிப்பில் உள்ள 15 ஆயிரம் வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

கழிவு நீரோடையில் வாந்தி எடுத்த கர்ப்பிணி தவறி விழுந்து பலி

தற்போது சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருவதால் தமிழக முதல்வர் விவசாயிகள் நலன் கருதி பயிர் காப்பீட்டு தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios