தேர்தல் ஆணையர் எனக்கு மாமனா மச்சானா.? அவர் ஏன் ரிசைன் பண்ணினார் என அவர்கிட்ட தான் கேட்கணும்- சீறும் அண்ணாமலை

அரசியல் என்பது 24 மணி நேரமும் சேவை செய்யக்கூடிய ஒரு பணி,  எனவே நடிகர்களை விட்டு விடுங்கள் என அண்ணாமலை தமிழக மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

Annamalai said that BJP is the only party for those who want change in Tamil Nadu KAK

அரசியல் என்பது கடினமான வேலை

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவரிடம், திமுக அணியில் கமல்ஹாசன் இணைந்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், மூத்த நடிகர் தமிழகத்தில் அரசியல் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என கட்சியை ஆரம்பித்தார். தற்போது கமல்ஹாசன் மறுபடியும் திமுக பக்கத்தில் இணைந்துள்ளார்.

அரசியல் என்பது கடினமான வேலை. கொள்கை அரசியல் என்பது ஒரு கடினமான வேலை எனவே எங்கு செல்ல வேண்டும் என்பது கமலஹாசனின் முடிவு என கூறினார். கமலஹாசன் தன்னை நம்பி வந்தவர்களும் ஒரு மாற்றம் கொடுக்க வேண்டும் என்பதற்காக கட்சி ஆரம்பித்தார். மாற்றத்தை யாரெல்லாம் விரும்புகிறார்களோ அதற்கு ஒரே கட்சி பாஜக தான் என கூறினார். 

Annamalai said that BJP is the only party for those who want change in Tamil Nadu KAK

நடிகர்களை விட்டு விடுங்கள்

தமிழகத்தில் மாற்றங்களை கொடுக்க வேண்டும் என பாஜக களம் இறங்கியுள்ளது.   நிர்பந்தம் காரணமாக மீண்டும் திமுகவுக்கு சென்று சரணடைய வேண்டிய நிலைமை கமல்ஹாசனுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.  நடிகர்கள் அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் இன்றைக்கு நடிகர்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதை திரும்ப கேட்கிறேன்.

நடிகர்கள் சமூக ஆர்வலர்களாக இருக்கிறார்களா? சாமானியவர்களா? ரோட்டில் மக்கள் பிரச்சனை பார்க்கின்றவர்களா? எதற்கு எடுத்தாலும் நடிகர்கள் தான் பேசனும் என்பதிலிருந்து மக்கள் வெளியே வரவேண்டும். அவர்கள் ஒரு வட்டத்திற்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு நடிகர்களின் நிலைமை அரசியல் சார்பாக உள்ளது. அரசியல் என்பது 24 மணி நேரமும் சேவை செய்யக்கூடிய ஒரு பணி எனவே நடிகர்களை விட்டு விடுங்கள் என கேட்டுக்கொண்டார்.

Annamalai said that BJP is the only party for those who want change in Tamil Nadu KAK

தேர்தல் ஆணையர் மாமனா.? மச்சானா.?

தொடர்ந்து போதைப்பொருள் கடத்திய திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தவர், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதை பொருள் கடத்தலில் இன்னும் யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அதை எல்லாம் கண்டுபிடித்து தமிழக மக்கள் முன்பு நிறுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உண்டு என கூறினார். இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையர் திடீரென ராஜினாமா செய்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் ஆணையர் எனக்கு மாமனா மச்சானா.? அவர் ஏன் ரிசைன் பண்ணினார் என்று அவர்கிட்ட தான் கேட்கணும்,  அவருக்கு நான் மாமனும் இல்லை மச்சானும் இல்லை, தெரிந்திருந்தால் போன் செய்து சொல்லி இருப்பார் என அண்ணாலை தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

தலைமைத் தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா ஏன்? தப்பா இருக்கே.. சந்தேகம் எழுப்பும் கிருஷ்ணசாமி.!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios