கோவை மாவட்ட ஆட்சியரிடம் திமுகவுக்கு எதிராக கூட்டாக மனு அளித்த அதிமுக எம்எல்ஏக்கள்

அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள், வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருவதாக எஸ்.பி வேலுமணி புகார் தெரிவித்தார்.

aiadmk mlas petition against dmk members to district collector in coimbatore vel

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை, முன்னாள் அதிமுக அமைச்சரும், தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களும் சந்தித்தனர். தொகுதிவாரியாக உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும், சட்டமன்ற உறுப்பினர் நிதியை முறையாக பங்கீடு செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எஸ்பி வேலுமணி, கோவைக்கு கடந்த 3 ஆண்டுகளாக எந்த திட்டமும் கிடைக்கவில்லை. அதிமுக காலத்தில் கோவைக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். சிறுவாணி தண்ணீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். பல்லடம் தனியார் செய்தியாளர் தக்கப்பட்ட சம்பவத்தில் முன்கூட்டியே காவல்துறையிடம் பாதுகாப்பு கேட்டும் தரவில்லை. 

புதுவையில் பாஜக வேட்பாளரே போட்டி; மறைமுகமாக உறுதிப்படுத்திய முதல்வர் ரங்கசாமி

கனிமவளம் கொள்ளை அதிகமாக நடந்து வருகிறது. ஊருக்குள் வனவிலங்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான சாலைகள் குண்டும் குழிகளாகவும் உள்ளன. அதை சீரமைக்க வேண்டும், எனவும் குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளை இணைத்து, (தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், அவிநாசி, சுல்தான்பேட்டை, சூலூர்) ஆகிய அத்திக்கடவு அவிநாசி திட்டம் II செயல்படுத்தப்பட அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை மாவட்டத்தில் அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அதிகாரிகள், வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியோடு, பழிவாங்கும் நடவடிக்கையாக பல்வேறு இடையூறுகளை அளித்து வருகின்றனர். குறிப்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கு குற்றச்சாட்டு குறிப்பானைகளை வழங்கி Section 205யை பயன்படுத்தி ஊராட்சி மன்ற தலைவருக்கான அதிகாரங்களை பறிக்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும்  என கேட்டுக்கொண்டார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios