புதுவையில் பாஜக வேட்பாளரே போட்டி; மறைமுகமாக உறுதிப்படுத்திய முதல்வர் ரங்கசாமி

கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்வது நமது கடமை என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தொண்டர்கள் மத்தியில் பேசியிருப்பதால் புதுவையில் பாஜக போட்டியிடுவது மறைமுகமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

we will do hard work for alliance parties Success in parliament election said puducherry cm rangasamy vel

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ரங்கசாமி உரையாற்றினார். அதில் கட்சி தொடங்கி 13 ஆண்டுகள் நிறைவு செய்து 14-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறோம். மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல அமைக்க கட்சி ஆரம்பிக்கப்பட்ட நாள். மக்களின் ஆலோசனை, உழைப்போடு கூட்டணி கட்சியோடு ஆட்சி அமைத்து வளர்ச்சிக்காக 5-ஆண்டுகள் முழுமையாக ஆண்டு இருக்கிறோம். 

பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். தேர்தலை சந்தித்தது போது எதிர்கட்சி வரிசையில் அமர்ந்து நிர்வாக சீர்கேட்டை வெளிப்படுத்தினோம். கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. நிர்வாகத்தை சரியான முறையில் நடத்தவில்லை என்பதை மக்கள் அறிவார்கள். அதன் காரணமாக புதுச்சேரி பின்னுக்கு தள்ளப்பட்டது. என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்து மீண்டும் ஆட்சி அமைத்து நடத்திக்கொண்டு இருக்கிறோம். 

சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்

பிரதமர் உறுதுணை, ஆசியோடு மாநில வளர்ச்சிக்கு நிதியை பெற்று, கடந்த கால ஆட்சியின் சீர்கேட்டை சரி செய்து ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறோம். மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வந்து  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். கூட்டணி ஆட்சியில் ஒன்றாக இணைந்து அமைச்சரவையில் சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் துணைநிலை ஆளுநருடன் இணக்கமாக சூழல் இல்லாமல் நிர்வாகம் சீர்கெட்டு இருந்தது. ஆனால் தற்போது அப்படி இல்லை. பழையை திட்டங்களை மீண்டும் செயல்படுத்தி வருகிறோம். கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசு எப்படி நடத்த முடியும் என கேள்வி எழுந்தது ஆனால் அரசு பொறுப்பேற்ற பின்னர் மிக மோசமாக இருந்த சாலைகள் சீரமைக்கப்பட்டது, உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மக்களுக்கு நல்லது செய்ய யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் ராமேஸ்வரத்தில் வடிவேல்

தொடர்ந்து மாணவர்களுக்கான சிறந்த கல்வி மற்றும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. கடந்த ஆட்சியில் நிறுத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. மாலையில் சிறுதானிய உணவு விரைவில் வழங்க உள்ளோம். மக்களுக்காக  நலத்திட்டங்களை வழங்குவதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகளுக்கு அறிவித்த பண்டிகை கால திட்டங்களை அவர்களது வங்கி கணக்கில் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்க வேண்டுமென மத்திய அரசிடம் கூறிய போது அவர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்பட வேண்டும் என தெரிவித்ததன் அடிப்படையில் பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் குறித்த நேரத்தில் செலுத்தப்படுகிறது என்றார்.

மேலும்  பாராளுமன்ற தேர்தல் விரையில் வர உள்ளது. வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற உழைக்க வேண்டும். கூட்டணி கட்சியை சார்ந்த வேட்பாளரை வெற்றிபெற வைக்க வேண்டும். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சொன்னதை செய்கின்ற அரசாக உள்ளது. அமைச்சர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். கட்சியை பலப்படுத்த 5 பேர் கொண்ட உயர்மட்ட குழு மற்றும் 10 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios