- Home
- Tamil Nadu News
- Puducherry
- விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ... குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!
விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ... குஷியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள்..!
Holiday: காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு, இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்.

பள்ளி மாணவர்கள்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோவில் திருவிழாக்கள், கும்பாபிஷேகம், மசூதி, தேவாலயங்களில் மற்றும் தியாகிகளின் நினைவு தினம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கந்தூரி விழா
இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இதில், காரைக்கால் மட்டுமன்றி, தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். பக்தர்களின் வசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
இதுதொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: காரைக்கால் பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்/கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 7ம் வேலை நாளாக அறிவிப்பு
பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் முன்பருவத் தேர்வுகள் இருப்பின் திட்டமிட்டப்படி அவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வு உள்ள மாணவர்கள் மட்டும் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக பிப்ரவரி 7ம் தேதி சனிக்கிழமை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

