டோட்டலாகவே மாறும் கிளைமேட்.. வானிலை மையம் கொடுத்த பரபரப்பு அப்டேட்..
தமிழகத்தில் வரும் நாட்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஜனவரி 31 முதல் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், பலத்த சூறாவளிக்காற்று வீசும்.

கடும் பனிபொழிவு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிபொழிவு நிலவியதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். திடீரென கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்த நிலையில் மீண்டும் பனிபொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வரும் நாட்கள் கிளைமேட் எப்படி இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வறண்ட வானிலை
அதாவது இன்று முதல் 30ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் 31 முதல் பிப்ரவரி 02 வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 3ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தமிழக கடலோரப்பகுதிகள்
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அதேபோல் ஜனவரி 20ம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

