- Home
- Tamil Nadu News
- குடிமகன்களே சரக்கு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க.. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
குடிமகன்களே சரக்கு வாங்கி ரெடியா வச்சுக்கோங்க.. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
தமிழகம் முழுவதும் தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறும் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள்
தமிழகத்தில் மொத்தமாக 4,829 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 120 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. வார விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் வருமானம் கொட்டும். தமிழக அரசுக்கு வருமானத்தை அள்ளி கொடுக்கும் துறையாக டாஸ்மாக் நிறுவனம் இருந்து வருகிறது.
ஆண்டுக்கு 8 நாட்கள் மட்டுமே விடுமுறை
முழு மது விலக்கை அமல்படுத்தக்கோரி போராட்டங்கள் நடைபெற்று வந்தாலும் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. டாஸ்மாக் துறையை அரசு எடுத்து நடத்தி வந்தாலும் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விஷேச நாட்களில் கூட விடுமுறை என்பதே இல்லை. அதாவது ஆண்டுக்கு மொத்தம் 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் ஊழியர்களுக்கு விடுமுறை.
பிப்ரவரி 1ம் தேதி விடுமுறை
இதனிடையே ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் குருபூஜை நாட்கள், கோயில், மசூதி, தேவாலய விழாக்களின் போது டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும். இந்நிலைளில் பிப்ரவரி 1ம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தினம் முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகள் மூடல்
இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையர் அறிவுறுத்தலின்படி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை டாஸ்மாக் விடுமுறை தினமாகும். அன்றைய நாளில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மதுபான கூடங்களுடன் இணைந்த மற்றும் மதுபான கூடங்கள் இல்லாமல் இயங்கும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மதுபானம் அருந்தும் கூடங்கள் அனைத்தையும் மூட வேண்டும்.
சரக்கு வாங்கி வைக்கும் குடிமகன்கள்
மேற்படி ஆணையை செயல்படுத்த தவறும் பட்சத்தில் தொடர்புடைய டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள் மற்றும் உரிமம் பெற்ற மதுபான கூடங்களின் உரிமைதாரர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பதால் முன்கூட்டியே சரக்கு வாங்கி வைக்க குடிமகன்கள் திட்டமிட்டுள்ளனர்.

