Asianet News TamilAsianet News Tamil

Crime: கோவையில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர்; பட்டப்பகலில் வெட்டி படுகொலை

கோவை மாவட்டத்தில் ஓடும் காரில் இருந்து தள்ளிவிடப்பட்ட வழக்கறிஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

advocate killed by suspicious persons in coimbatore vel
Author
First Published Aug 2, 2024, 6:57 PM IST | Last Updated Aug 2, 2024, 6:58 PM IST

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கோவையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்யாவள்ளி கோவில்பாக்கம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இதனிடையே பொள்ளாச்சி செல்வதற்காக இன்று காலை தனது காரில் புறப்பட்ட உதயகுமாரின் உடல் மைலேரிபாளையம் அருகே கோழிப்பண்ணை முன்பாக கிடந்தது.

ரயில் நிலைய பராமரிப்பு பணி; சென்னையில் நாளை முதல் கூடுதல் பேருந்துகள் - போக்குவரத்து கழகம் அறிவிப்பு

இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சூலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ஓடும் காரில் இருந்து உதயகுமார் கீழே தள்ளிவிடப்பட்டதாகவும், அவர் கீழே விழுந்தவுடன் மர்ம நபர்கள் அவரை உடலின் பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. வழக்கறிஞரை கொலை செய்த மர்ம நபர்கள் அவரது காரிலேயே தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது.

ராமர் இருந்ததற்கு ஆதாரமும் கிடையாது, வரலாறும் கிடையாது - அரசு விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு

உயிரிழந்த உதயகுமாரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios