Asianet News TamilAsianet News Tamil

கோவை கார் வெடிப்பு சம்பவம்… கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் மூன்று நாட்கள் போலீஸ் காவல்!!

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

accused arrested regarding covai car blast have sent to police custody
Author
First Published Oct 26, 2022, 10:40 PM IST

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ம் தேதி அதிகாலை 4 30 மணி அளவில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் வீட்டில் இருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையும் படிங்க: மணப்பாறை அருகே கார்கள் மோதிக்கொண்டு கோர விபத்து... பெண்கள் உட்பட 4 பேர் பலி!!

இதுத்தொடர்பான வழக்கில் முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் தகவல் அறிக்கையில் தற்போது உபா பிரிவு கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டுசதி, இரு பிரிவினரிடையே விரோதத்தை ஏற்படுத்துதல் ஆகிய 3  பிரிவுகளும் முதல் தகவல் அறிக்கையில் கூடுதலாக  சேர்க்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்கால தடை... போன்பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி!!

இவர்கள் 5 பேரையும் விசாரிக்க மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஏ) விசாரணைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், என்ஐஏ அதிகாரிகளும் கோவையில் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios