மணப்பாறை அருகே கார்கள் மோதிக்கொண்டு கோர விபத்து... பெண்கள் உட்பட 4 பேர் பலி!!
திருச்சி மணப்பாறை அருகே கார்கள் ஒன்றையொன்று மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி மணப்பாறை அருகே கார்கள் ஒன்றையொன்று மோதிக் கொண்ட விபத்தில் பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி. 67 வயதான இவர் தனது மனைவி மங்கையர்க்கரசி, பேரன் பிரதுன், உறவினர்கள் பூஜா, ரஞ்சனா, ஆகிய ஐந்து பேருடன் ராஜபாளையத்திலிருந்து திருச்சி நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு காரில் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: குடிபோதையில் தகராறு செய்த மகன்... கடுப்பான தந்தையின் செயலால் பரபரப்பு!!
மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த செவந்தம்பட்டி விளக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதை அடுத்து கார் சாலை மையதடுப்பைத் தாண்டி எதிர்சாலையில் வந்த காரில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரண்டு கார்களும் அப்பளம் போல் நொறுங்கின. விபத்துக்குள்ளான கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிங்க: காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி.. நடுக்காட்டில் நடந்த கொடூர சம்பவம் - பரபரப்பு பின்னணி
இந்த கோர விபத்தில் மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் மற்றொரு காரில் சென்ற பத்மா ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். இதை அடுத்து காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இறந்த நான்கு பேரின் உடல்களும் பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.