கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து வெளியேறிய புகையால் ஓட்டம் பிடித்த பயணிகள்

கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் இருந்து திடீரென வெளியேறிய புகையால் அச்சமடைந்த பயணிகள் பேருந்தில் இருந்து  அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

a private bus stuck fire accident in coimbatore district

கோவையில் இருந்து அன்னூர் வழியாக சத்தியமங்கலத்துக்கு ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை அஜந்தா என்ற தனியார் பேருந்து வழக்கம் போல பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவையில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி  சென்று கொண்டிருந்தது. 

பசூர் அருகே பேருந்து வந்தபோது, எஞ்சின் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியேறி பேருந்து முழுவதும் பரவியது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் பேருந்தை சாலையோரமாக நிறுத்தி பயணிகளை எச்சரித்தார். இதனால் அச்சமடைந்த பயணிகள் அலறியடித்தவாறு பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். பேருந்தில் இருந்து வெளியேறிய புகை சாலை முழுவதும் பரவி புகைமண்டலமாக காட்சியளித்து. 

முதுமலையில் வளர்ப்பு யானைகளுக்கு எடை மற்றும் உயரம் கணக்கெடுப்பு

இதையடுத்து மாற்று பேருந்து மூலம் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்‌. பேருந்தில் புகை வெளியேறியதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் குறைந்தால் எஞ்சின் வெப்பமடைந்து புகை வெளியேற வாய்ப்புள்ளதாக கூறும் பேருந்து பழுது நீக்கும் வல்லுநர்கள், ஓட்டுநர்கள் வாகனத்தை இயக்கும் முன்பு ரேடியேட்டரில் தண்ணீர் அல்லது கூலன்ட் ஆயில் உள்ளதா என்பதை கட்டாயம் சோதிக்க வேண்டும் என்கின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios