இரண்டு மாத இடைவேளைக்கு பின்னர் ஒய்யார நடைபோட்டு ஊருக்குள் வந்த கஜா யானை
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரு மாதங்களாக ஊருக்குள் வராமல் இருந்த கஜா காட்டு யானை தற்போது மீண்டும் ஊருக்குள் வந்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை, குரும்பனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை கஜா அவ்வபோது வந்து செல்லவது வாடிக்கையாகிவிட்டது.
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த காட்டுயானை அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி செல்வதால் விவசாயிகள் இந்த யானையை அடர் வனத்தினுள் விரட்ட வலியுறுத்தி வருகின்றனர்.
திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் கைது; சிங்கம் பட பாணியில் போலீஸ் அதிரடி வேட்டை
நெல்லிமலை வனப்பகுதிக்கும் கல்லார் வனப்பகுதிக்கும் இடையே செல்ல இந்த சமயபுரம் கிராம சாலை வழியாக வருவதை காட்டுயானை வழக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நடமாடி வந்தாலும் இதுவரை இந்த காட்டுயானை மனிதர்களை தாக்கியதில்லை.
இந்த நிலையில் இந்த காட்டு யானை கடந்த இரு மாதங்களாக சமயபுரம் பகுதியில் அதன் நடமாட்டத்தை வெளிப்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இருமாத இடைவேளைக்கு பிறகு மீண்டும் குடியிருப்புகள் நிறைந்த சமயபுரம் பகுதிக்கு வந்துள்ளது.
வசூல் ராஜா பட பாணியில் ப்ளூ டூத் மூலம் ராணுவ தேர்வு..! வட மாநில இளைஞர்கள் 29 பேர் சென்னையில் கைது
கல்லார் வனப்பகுதியில் இருந்து நெல்லிமலை வனப்பகுதிக்குள் செல்ல சமயபுரம் குடியிருப்பு சாலையில் புகுந்து நெல்லிமலைக்கு சென்றது எவ்வித அச்சமும் இன்றி இயல்பான தனது ஒய்யார நடையில் காட்டுயானை கஜா சமயபுரம் சாலையில் நடமாடியதை கண்டு கிராம மக்கள் வீடுகளுக்குள் புகுந்து கதவை மூடி கொண்டனர்.