கோவையில் கழிவுநீர் ஓடையில் மாட்டிக்கொண்ட பசு; பல மணி நேரம் போராடி மீட்ட அதிகாரிகள்
கோவையில் 12 மணி நேரத்திற்கும் மேலாக சாக்கடைக்குள் விழுந்து தவித்த பசு மாட்டினை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் சௌரிபாளையம் அன்னை வேளாங்கண்ணி நகர் பகுதியில் பசுமாடு ஒன்று சுற்றிக் கொண்டு இருந்தது. அந்த பசு திடீரென கழிவு நீர் வாய்க்காலில் விழுந்தது. வாய்க்காலில் இருந்த பசு மாட்டை மீட்பதற்கு உரிமையாளர் போராடினார். இறுதியில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த கோவை தெற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் 5 அடி ஆழம் கொண்ட கழிவுநீர் வாய்க்காலில் சிக்கி இருந்த பசு மாட்டை மீட்க வேண்டுமானால், கான்கிரீட் தளத்தை உடைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
சாலையில் நடந்து சென்ற முதியவர் கிரேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
இதனையடுத்து தீயணைப்புத் துறையினர் கான்கிரீட் தளத்தை உடைத்து மாட்டை காப்பாற்றினர். பின்னர் தீயணைப்பு துறையினர் பசு மாட்டிற்கு தண்ணீர் கொடுத்து, மாட்டை தடவி கொடுத்தும் அன்பை வெளிப்படுத்தினர். துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினரை மக்கள் பாராட்டினர்.