Asianet News TamilAsianet News Tamil

வால்பாறையில் சிறுத்தை தாக்கி வடமாநில தொழிலாளியின் மகன் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே வட மாநில சிறுவனை சிறுத்தை தாக்கியதில் சிறுவன் படுகாயம் வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி.

7 years old boy highly injured for leopard attack at valparai in coimbatore district vel
Author
First Published Nov 7, 2023, 12:09 PM IST | Last Updated Nov 7, 2023, 12:09 PM IST

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள சிறு குன்றா எஸ்டேட்  எல் டி டிவிஷனில்     ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சஞ்சய் ஓரம். இவரது மகன்  பரிதீப் (வயது 7). 

இவர் தனது வீட்டில் சுமார் 6.30 மணி அளவில் வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது தேயிலைத்தோட்டத்தில் இருந்து சிறுத்தை ஒன்று சிறுவனை  தாக்கியது. இவரை தாக்கி தேயிலைத்தோட்டத்தில் இழுத்துச் செல்ல முயற்சித்தது. சிறுவனின்  அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர்  சத்தம் போட்டதில் சிறுத்தை சிறுவனை விட்டு தேயிலை  தோட்டத்திற்குள் ஓடியது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சிறுவனை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். சிகிச்சையில் தலை மற்றும் கால், கை போன்ற இடங்களில் சிறுத்தையின் பல் மற்றும் நகங்கல் கீரல் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்து வந்த வால்பாறை சரகர் வெங்கடேஷ் மற்றும் நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி, காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கபட்ட சிறுவன் குடும்பத்திற்கு வால்பாறை வனத்துறை வன சரகர் வெங்கடேஷ் 10 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

மழையையும் பொருட்படுத்தாமல் நடவு செய்த விவசாயிகள்; மின்னல் தாக்கி ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios