Asianet News TamilAsianet News Tamil

கோவையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் பலி

கோவையில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

6 years old boy drowned water tank and death in coimbatore vel
Author
First Published Oct 7, 2023, 4:07 PM IST

கோவையை தொண்டாமுத்தூர் நாகராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் குகன்ராஜ். இச்சிறுவன் வேடப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தான். இவன் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு விளையாட சென்றான். அதன் பிறகு சிறுவன் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சிறுவனின் சித்தி நாகராணி பல இடங்களில் தேடியுள்ளார். 

ஆரவாரமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற அறநிலையத்துறை அமைச்சரின் 60ம் கல்யாணம்

அப்பொழுது நாகராஜபுரத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச் சுவர் கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 6 அடி ஆழம் 3 அடி அகலத்தில் தரைமட்ட தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. அதில் தண்ணீர் எடுப்பதற்காக கட்டிட பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் சென்றனர். 

கோவில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் - பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேச்சு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்பொழுது தண்ணீர் தொட்டியில் சிறுவன் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் குகன் ராஜை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது தொடர்பாக தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios