Asianet News TamilAsianet News Tamil

ஆரவாரமின்றி அமைதியான முறையில் நடைபெற்ற அறநிலையத்துறை அமைச்சரின் 60ம் கல்யாணம்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு இன்று திருக்கடையூர் அமிர்தசரேஸ்வரர் ஆலயத்தில் 60ம் கல்யாணம் நடைபெற்றது.

minister sekar babu and his family members participated special pooja at amirthakadeswarar temple in mayiladuthurai vel
Author
First Published Oct 7, 2023, 1:17 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்பாள் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்ததால் இத்தலம் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இத்தளத்தில் பக்தர்கள் சிறப்பு ஹோமம் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். 

இத்தகைய சிறப்பு மிக்க கோவிலில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60 வயது பூர்த்தி அடைந்து 61வது வயது தொடங்குவதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை கோவிலுக்கு வந்த சேகர் பாபு, அவரது மனைவி சாந்திக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்குள் சென்ற அமைச்சர் தம்பதி சமேதராக கோபூஜை கஜ பூஜை செய்தனர். பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதல் கால யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார். 

கோவில் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் - பொன் மாணிக்கவேல் பரபரப்பு பேச்சு

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தொடர்ந்து இன்று காலை சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு பட்டாடை சகிதமாக ஸ்ரீ சூரணம் திலகம் தரித்து மங்கள வாத்தியங்கள் முழங்க அவரது மனைவி  சாந்திக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு தம்பதியினர் சுவாமி அம்பாள் கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர். 

தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட மாட்டை காப்பாற்றச் சென்ற விவசாயி, மாடு ரயில் மோதி உயிரிழப்பு

சஷ்டியப்த பூர்த்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபுவுக்கு தர்மபுரம் ஆதீனம் சார்பில் ஆதின கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் தலைமையில் ஆதீன கோவில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி, திருக்கடையூர் கோவில் உள்துறை விருதகிரி ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர் மேலும் வைத்தீஸ்வரன் கோவில் திருமணஞ்சேரி உள்ளிட்ட கோவில்களில் இருந்து பிரசாதங்களை கோவில் சிவாச்சாரியார்கள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் இந்து  சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உதவி ஆணையர் முத்துராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios