கோவையில் இட்லி கண்காட்சி... பல்வேறு வடிவங்களில் 500 வகையான இட்லிகள் தயாரிப்பு!!
கோவையில் 500 வகை இட்லிகள் இடம்பெற்ற இட்லி கண்காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
கோவையில் 500 வகை இட்லிகள் இடம்பெற்ற இட்லி கண்காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது. கோவை சுங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் இட்லி கண்காட்சி நடைபெற்றது. கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிறு தானியங்கள், காய்கறிகளை கொண்டு 500 வகைகளில் இட்லிகளைத் தயாரித்து காட்சிப்படுத்தினர்.
இதையும் படிங்க: நிதி அமைச்சர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரணை தேவை: ஈபிஎஸ் வலியுறுத்தல்
இந்த கண்காட்சியில் மீன் வடிவிலும், கரடி, பொம்மைகள், பட்டாம்பூச்சி, இசைக்கருவிகள், ஹார்டின் வடிவங்களிலும் இட்லிகள் தயரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதுகுறித்து கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தை சேர்ந்த இனியவன் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக இட்லி தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.
இதையும் படிங்க: வாட்டி வதைக்கும் கோடை வெயில்… கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!!
இட்லி ஒரே வடிவத்தில் இருப்பதால் அதனை மாற்றி குழந்தைகளுக்கு பிடித்தது போலவும், சத்தான தானியங்களை சேர்த்தும் இட்லி தயாரித்து வருகிறோம். இதனை தொடர்ந்து இட்லி தயாரிப்பில் உலக சாதனையை படைத்துள்ளோம். இட்லியை உலகம் முழுக்க கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.