பெங்களூருவில் இருந்து கடத்தி வரப்பட்ட 500 கிலோ குட்கா கோவையில் பறிமுதல்

பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட 500 கிலோ குட்கா பொருட்கள் சூலூர் அருகே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இருவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

500 kg gutka seized by sulur police in coimbatore

கோவை மாவட்டம் சூலூர் தென்னைமரம் பகுதியில் சூலூர் காவல் துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவை நோக்கி வந்த ஒரு மினி டெம்போவை காவல் துறையினர் மறித்துள்ளனர். ஆனால்  மினி டெம்போ ஓட்டுநர்  நிறுத்தாமல் வேகமாக சென்றதால் சந்தேகம் அடைந்த காவல் துறையினர் வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்தனர்.

அப்போது  வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த குட்கா  மற்றும் கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் சூலூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுபட்டனர்.

சேலத்தில் வடமாநில தொழிலாளர் மர்மமான முறையில் மரணம்; காவல் துறையினர் விசாரணை

அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாதரம் (வயது 31) மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (26) ஆகிய இருவர் பெங்களூருவில் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கி வந்து சூலூர் பகுதியில் விற்பனை செய்ய கொண்டு வந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து  இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து கடத்தல் பொருட்கள் மற்றும் மினி டெம்போவை  பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈரோட்டில் பாலை சாலையில் ஊற்றி உற்பத்தியாளர்கள் போராட்டம்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios